விடாமுயற்சி படத்தின் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கிய 5 படங்கள் எது தெரியுமா.?
தமிழ் சினிமாவில் பெயர் பெற்ற இயக்குனரா வலம் வருபவர் மகிழ்திருமேனி. இவர் தமிழில் ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே இயக்கி பெயர் பெற்ற இயக்குனராக வலம் வருகிறார். தற்போது அஜித் கதாநாயகனாக நடிக்கும் 'விடாமுயற்சி' திரைப்படத்தின் இயக்குனராக இருக்கிறார் மகிழ்ந்திருமேனி.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் பல தடைகளை தாண்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து ரசிகர்கள் தொடர்ந்து இணையத்தில் விடாமுயற்சி திரைப்படத்தின் அப்டேட் கேட்டு வருகின்றனர்.
இது போன்ற நிலையில், விடாமுயற்சி திரைப்படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனி இதற்கு முன் இயக்கிய படங்களை குறித்து இணையத்தில் அடிக்கடி பேச்சு எழுந்து வருகிறது.

இதன்படி இவர் முன்தினம் பார்த்தேனே, மீகாமன், கலகத் தலைவன், தடையறத் தாக்க, தடம் போன்ற திரைப்படங்களை இயக்கயுள்ளார். இதில் மீகாமன், தடம் திரைப்படங்கள் மட்டுமே ஒரு அளவிற்கு வெற்றியடைந்தது. இச்செய்தி இணையத்தில் தீயாய் பரவி அஜித் எதற்காக இப்படத்திற்கு சம்மதித்தார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.