அளவில்லா மகிழ்ச்சியில் நடிகர் மகத்! அப்படியென்ன விசேஷம் தெரியுமா?? வாழ்த்துக்களை தெறிக்கவிடும் ரசிகர்கள்!

அளவில்லா மகிழ்ச்சியில் நடிகர் மகத்! அப்படியென்ன விசேஷம் தெரியுமா?? வாழ்த்துக்களை தெறிக்கவிடும் ரசிகர்கள்!


magath post about her wife pregnant

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் மகத். இவர் 2006 ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளிவந்த வல்லவன் திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சினிமாத்துறையில் அறிமுகமானார்.

 அதனைத் தொடர்ந்து அவர் காளை மற்றும் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த மங்காத்தா போன்ற படத்தில் சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். பின்னர் மகத் 2018 ஆம் ஆண்டு விஜய் மற்றும் மோகன்லால் நடிப்பில் வெளிவந்த ஜில்லா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்தே அவர் விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மஹத் மிகவும் ஆக்ரோஷமான போட்டியாளராக இருந்தார். யாசிகாவுடன் காதல் உள்ளிட்ட பல சர்ச்சைகளில் சிக்கினார். ஆனால் மகத் ஏற்கனவே பிராச்சி என்பவரை காதலித்து வந்த நிலையில் இருவரும் கடந்த வருடம் ஜனவரி மாதம் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் மகத்தின் மனைவி தற்போது கர்ப்பமாக உள்ளார். அந்த மகிழ்ச்சியான செய்தியை மிகவும் உற்சாகத்துடன் மகத் புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தில் பகிர்ந்துள்ளார். அதனைத் தொடர்ந்து அந்த தம்பதியினருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.