22 வருடங்களுக்கு பிறகு உருவாகிறது செம ஹிட் கொடுத்த விஜய் படத்தின் இரண்டாம் பாகம்.! எந்த படம் தெரியுமா?

22 வருடங்களுக்கு பிறகு உருவாகிறது செம ஹிட் கொடுத்த விஜய் படத்தின் இரண்டாம் பாகம்.! எந்த படம் தெரியுமா?


love today second part maked by director

 தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றித் திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக கொடிகட்டி பார்ப்பவர் தளபதி விஜய். மேலும் அவருக்கு என உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.

அதுமட்டுமின்றி அவருக்கென  ரசிகர் மன்றங்கள், மக்கள் மன்றம் என பல அமைப்புகள் செயல்பட்டு வருகிறது. மேலும் அதன் மூலம் ரசிகர்கள் மக்களுக்கு பல உதவிகளையும் செய்து வருகின்றனர். தளபதி விஜய்யின் படங்கள் வெளியாகும் நாட்களை திருவிழாக்களை போல கொண்டாடி வருகின்றனர்.

vijay

இந்நிலையில் தற்போது விஜய் மற்றும் அட்லி கூட்டணியில் இணைந்து மூன்றாவது முறையாக உருவாகியுள்ள படம் பிகில். இப்படம் தீபாவளியன்று ரிலீசாகிறது என அறிவிப்பு வெளிவந்தநிலையில் படம் வெளியாகும் நாட்களை ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

விஜய் தற்போது பல மாஸ் படங்களை கொடுத்தாலும், சினிமா வரலாற்றில் அவர் வளர்ச்சியடைய மிக முக்கியான படங்களில் ஒன்றாக இருந்தது லவ் டுடே.

vijay

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய லவ்-டுடே பட இயக்குனர் பாலசேகரன் விஜய் தற்போது உச்ச நட்சத்திரமாக உயர்ந்து நிற்கிறார். ஆனாலும் அப்பொழுது இருந்த  அமைதியும், பணிவுவும் இப்போதும் அப்படியே உள்ளது.மேலும் லவ்-டுடே படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளேன் என கூறியுள்ளார். இந்நிலையில் இப்படத்தில் விஜய் மீண்டும் நடிப்பாரா என ரசிகர்கள் பெரும் சந்தேகத்துடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.