
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிக் பாஸ் சீசன் 3
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் சீசன் 3 ல் கலந்து கொண்டதன் மூலம் இளம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் லாஸ்லியா இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான இவருக்கு இந்நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான ரசிகர்கள் உருவாகினர்.
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. நடிகை லாஸ்லியா தற்போது ஹர்பஜன்சிங் உடன் இணைந்து பிரண்ட்ஷிப் மற்றும் பிக்பாஸ் தர்ஷனுடன் கூகுள் குட்டப்பன் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கும் லாஸ்லியா அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துவார். இந்த நிலையில் அவர் தற்போது ஒரு பாறை மேல் அமர்ந்து ஸ்லோ மோஷனில் வரும் க்யூட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றன.
Advertisement
Advertisement