வாவ்! பிக்பாஸ் லாஸ்லியாவா இது! ஹாலிவுட் ஹீரோயின்களையே மிஞ்சிடுவார் போல! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் லாஸ்லியா. இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான இவருக்கென பெரும் ஆர்மி உருவானது. மேலும் அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது மற்றொரு போட்டியாளரும், நடிகருமான கவினுடன், காதல் வசப்பட்டு சர்ச்சையில் சிக்கினார்.
மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிவரை சென்ற அவருக்கு அதனை தொடர்ந்து ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்தது. தற்போதும் சில படங்களில் நடித்து வருகிறார் அதுமட்டுமின்றி சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் லாஸ்லியா அவ்வப்போது வித்தியாசமான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் லாஸ்லியா தற்போது ஹாலிவுட் ஹீரோயினை போல செம்ம மாஸாக பிளாக் அண்ட் ஒயிட் போட்டோ ஷூட் நடத்தி அந்தப் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் வாயடைக்க வைத்துள்ளது.