சினிமா

பிக்பாஸ் கொண்டாட்டம்.! ரசிகர்களை கிறங்கடித்து லாஸ்லியா போட்ட குத்தாட்டத்தை பார்த்தீர்களா!! லீக்கான வீடியோ!!

Summary:

Losliya dance in bigboss celebration

பிக்பாஸ் சீசன் மூன்று கடந்த 105 நாட்களாக மிகவும் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருந்த நிலையில் கடந்த ஞாயிறுடன் முடிவுக்கு வந்தது. இதில் மலேசிய பாடகர் முகேன் வெற்றி பெற்றார். அவரை தொடர்ந்து சாண்டி இரண்டாவது இடத்தையும்,  லாஸ்லியா மற்றும் ஷெரின் மூன்று மற்றும் நான்காவது இடத்தையும் பெற்றனர்.

 பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தது முதல் ரசிகர்களால் பெருமளவில் கவரப்பட்டவர் லாஸ்லியா. இவருக்கென ஏகப்பட்ட ரசிகர்பட்டாளமும்,  ஆர்மியும் உருவானது. மேலும் இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் எப்பொழுதும் கலகலப்பாகவும், பட்டாம்பூச்சி போல சுற்றிக்கொண்டும் இருந்தார். அதனைத் தொடர்ந்து அவருக்கு கவின் மீது காதல் ஏற்பட்டு சிறு சலசலப்பும், சர்ச்சையும் கிளம்பியது. அதன் பின்னரே அவர் மீது ரசிகர்களுக்கு சிறுஅதிருப்தி ஏற்பட்டது.

 இருப்பினும் நிகழ்ச்சியின் இறுதி கட்டத்தில் வரை சென்ற அவர் மூன்றாவது இடத்தை வென்றார். பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய அவர் தற்போது பிக்பாஸ் கொண்டாட்டத்திற்காக தயாராகும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது.

இந்நிலையில் பிக்பாஸ் கொண்டாட்டம் நடந்து முடிந்துள்ளது. அவை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக  நிலையில் லாஸ்லியா குத்தாட்டம் போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் லீக்காகி வைரலாகி வருகிறது.


Advertisement