சூப்பர் ஸ்டாரை இயக்கப் போகும் லோகேஷ் கனகராஜ்.. வெளியான அதிரடி போஸ்டர்.? ரசிகர்கள் கொண்டாட்டம்.!



Lokesh kanagaraj next movie

கோலிவுட் திரையுலகில் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் 'மாநகரம்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக காலடியெடுத்து வைத்தார். ஆனால் இப்படம் பெரிதளவில் வெற்றி பெறவில்லை.

rajini

இதையடுத்து நீண்ட வருடங்களுக்குப் பிறகு கார்த்திக் நடிப்பில் 'கைதி' திரைப்படத்தை இயக்கியிருந்தார். இப்படம் மிகப்பெரும் வெற்றியடைந்து லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் எனும் பெயர் பெற்றார்.

மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் 'விக்ரம்' திரைப்படமும் மிகப்பெரும் வெற்றியடைந்ததை அடுத்து தற்போது விஜய் நடிப்பில் 'லியோ' திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

rajini

இது போன்ற நிலையில், தற்போது சூப்பர் ரஜினிகாந்தின் 171வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமான தகவல் தற்போது வெளியாகி உள்ளது. மேலும் இப்படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை அளித்துள்ளது.