புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
மதுரை : சிறப்பு தோற்றத்திற்கே இப்படியா... 1000 அடி பேனரால் கவனத்தை ஈர்த்த சிம்பு ரசிகர்கள்...
மஹா திரைபடத்திற்காக மதுரையில் மேம்பாலத்தின் மீது 1000 அடிக்கு பிளக்ஸ் பேனர் வைத்து சிம்பு ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தனர்.
நடிகை ஹன்சிகா மோத்வானியின் 50வது திரைப்படமான மஹா வருகின்ற ஜூலை 22 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தில் நாசர், கருணாகரன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்து உள்ளன.
இப்படத்தில் சிலம்பரசன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். அதனை வரவேற்கும் விதமாக மதுரை குருவிக்காரன் சாலைப் பாலத்தின் மீது மதுரை சிம்பு ரசிகர்கள் 1000 அடிக்கு ஃப்ளெக்ஸ் வைத்து அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளனர். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
"மஹா படத்தில் சிறப்பு தோற்றத்தில் சிலம்பரசன் நடிப்பதை கொண்டாடும் விதமாக தற்பொழுது ஆயிரம் அடிக்கு போஸ்டரை அடித்து உள்ளதாகவும் மஹா படத்தை மிகப்பெரிய அளவில் வெற்றி அடையச் செய்வோம் என்றும்" மதுரை ரசிகர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.