லியோ திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியீடு: நேற்று கிடைத்த நல்ல செய்தி.. டபுள் டமாக்காவாக கொண்டாடும் ரசிகர்கள்.!leo-ua-certificate-seven-screen-studios

 

நடிகர் விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ திரைப்படம், அக்.19ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தில் விஜய், திரிஷா, சஞ்சய் தத், கெளதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், ஜியார்ஜ் மரியான் உட்பட பலரும் நடித்து வருகின்றனர். அனிரூத் இசையமைத்துள்ளார்.  

இந்நிலையில், லியோ திரைப்படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பி இருந்த நிலையில், திரைப்படத்தை பார்த்த தணிக்கை குழு படத்திற்கு யுஏ தரச் சான்றிதழை வழங்கி இருக்கிறது. 

இந்த தகவலை தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. 

செப்டம்பர் அக்டோபர் ஐந்தாம் தேதியான இன்று திரைப்படத்தின் டிரைலர் காட்சிகள் வெளியிடப்படுவதாக அறிவித்துள்ள நிலையில், இந்த தகவல் விஜய் ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது.