அந்த கோடான கோடி இதயங்களில் நானும் ஒருவன்.. நிச்சயம் பலிக்கும்.! நம்பிக்கையில் நடிகர் சூர்யா!!
"லியோ படத்தின் கதை இப்படி தான் இருக்கும்" உண்மையை உடைத்த லியோ பட நடிகர்.?
"லியோ படத்தின் கதை இப்படி தான் இருக்கும்" உண்மையை உடைத்த லியோ பட நடிகர்.?

பிரபல ஹாலிவுட் மட்டும் பாலிவுட் நடிகர் டென்சில் ஸ்மித் முதன்முதலாக தளபதியுடன் இணைந்து நடித்து வெளியாகவிருக்கும் படம் 'லியோ'. வில்லனாக டென்சில் ஸ்மித் நடித்திருப்பார் என படத்தில் எதிர்பார்க்கப்படுகிறது. இத்திரைப்படத்தை பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.
'லியோ' படம் அடுத்த மாதம் 19 ஆம் தேதி வெளியாகிறது. பட வெளியீட்டிற்கான இறுதி கட்ட வேலைகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. லோகேஷ் கனகராஜ் இயக்கியிருப்பதால் கைதி, விக்ரம் போல ஒரு ஆக்சன் திரில்லர் படமாக இருக்கலாம் என தளபதி ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தப்படத்தில் நடித்திருக்கும் டென்சில் சுமித் ஏற்கனவே பல வெப் தொடர்களிலும் ஹாலிவுட் மற்றும் பாலிவுட் திரைப்படங்களில் வெற்றிகரமாக நடித்துள்ளார். எனவே திரைப்படத்திலும் நடிப்பில் மிரட்டி இருப்பார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் அவரளித்த பேட்டி ஒன்றில், நடிகர் விஜய் குறித்து பேசியிருந்தார். அதில் நடிப்பின் மீது விஜய் ஏற்படுத்தும் தாக்கம் தனக்கு ஆச்சரியமூட்டுவதாக இருப்பதாக கூறியுள்ளார். மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் திரைப்படம் எவ்வாறு அமைய வேண்டும் என மிகத் தெளிவாக இருப்பதாகவும் கூறியுள்ளார். இதனால் லியோ படம் விரைவில் திரைக்கு வர ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.