லியோ படம் வெளியான பின்பும் பின் தொடரும் சர்ச்சை.. இப்ப என்ன நடந்தது தெரியுமா.?



leo-movie-song-copied

தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். இவர் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் இசையமைத்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இசையமைப்பாளராக அறியப்படுகிறார்.

Leo

தமிழில் முதன் முதலில் தனுஷ் நடிப்பில் வெளியான 3 திரைப்படத்தில் ஒய் திஸ் கொலவெறி எனும் பாடலின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இந்த பாடலுக்கு பின்பு பல ஹிட் பாடல்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அளித்துள்ளார்.

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சமீபத்தில் திரையரங்கில் வெளியாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் 'லியோ' திரைப்படத்தில் இசையமைப்பாளர் அனிருத் தான். லியோ திரைப்படத்தின் பாடல்களும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Leo

இதே நிலையில், லியோ திரைப்படத்தில் ஆர்டினரி பர்சன் என்னும் பாடல் ஐரோப்பிய இசையமைப்பாளரின் பாடலில் இருந்து காப்பி எடுக்கப்பட்டது எனும் சர்ச்சை இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் நெட்டிசன்கள் அனிருத்தை கிண்டல் செய்து கமெண்ட் செய்து வருகின்றனர்.