சினிமா

தமிழ் சினிமாவின் ஆம்பள தல யார்னு தெரியும். பொம்பள தல யார்னு தெரியுமா?

Summary:

Lady thala in tamil cinema is saai pallavi

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் மாறி. இதன் முதல் பாகம் வெற்றிபெற்றதை தொடர்ந்து தற்போது மாறி படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. முதல் பாகத்தில் நாயகியாக காஜல் அகர்வால் நடித்திருப்பார். காமெடி கதாபாத்திரத்தில் ரோபோ சங்கர் நடித்திருந்தார்.

தற்போது மாறி படத்தின் இரண்டாம் பாகத்தில் காஜல் அகர்வாலுக்கு பதில் சாய் பல்லவி நாயகியாக நடித்துள்ளார். மலையாளத்தில் வெளியான ப்ரேமம் என்ற திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் நடிகை சாய் பல்லவி.

சாய்பல்லவிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். ப்ரேமம் படத்தை தொடர்ந்து அவர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் மாறி படம் அவரது தமிழ் சினிமா பயணத்தில் மிக முக்கிய படமாக எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் படத்தின் செய்தியாளர்கள் சந்தில் படத்தின் நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் பேசுகையில் நாம் எல்லோருக்கும் தல அஜித் பற்றி தெரியும். ஆனால் பொம்பள தல யார் என்பது பற்றி நமக்கு தெரியாது. பொம்பள தல வேற யாரும் இல்ல, நம்ம சாய் பல்லவிதான் என தெரிவித்துள்ளார்.


Advertisement