சினிமா

அட இந்த வெர்ஷனும் நல்ல இருக்கே! குட்டி ஸ்டோரி பாடலின் குழந்தைகள் வெர்ஷனை கேட்டுள்ளீர்களா! வீடியோ இதோ.

Summary:

Kutty story child version

மாநகரம், கைதி போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற படத்தில் நடித்துள்ளார் தளபதி விஜய்.இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

மேலும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்துள்ளார். இப்படம் விடுமுறை ஸ்பெஷலாக ஏப்ரல் மாதம் திரைக்கு வரவுள்ளது. ரசிகர்களும் இப்படத்தின் வருகைக்காக ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு தளபதி விஜய் குரலில் குட்டி ஸ்டோரி பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது வரை இப்பாடல் தான் யூடியூபில் No.1 டிரேடிங்கில் இருந்து வருகிறது.

சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் தமிழ் வெர்ஷன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலானது. இந்நிலையில் தற்போது குட்டி ஸ்டோரி பாடலின் குழந்தைகள் வெர்ஷன் வெளியாகியுள்ளது. இதனை கேரளாவை சேர்ந்த துருவா மற்றும் ஸ்கந்தா குழுவினர் பாடி அசத்தியுள்ளனர். 


Advertisement