சினிமா

ஒரு வார்த்தையால் அர்த்தமே மாறிப்போன குஷ்புவின் டிவிட்டர் பதிவு.! தவறுதான்.! மன்னித்து விடுங்கள்.! மன்னிப்பு கேட்ட குஷ்பு..!

Summary:

Kushoo say sorry for spelling mistake in her twit

ட்விட்டரில் கருத்து பதிவிட்டுல நடிகை குஷ்பூ, தான் பதிவிட்ட கருத்தில் ஏற்பட்ட வார்த்தை பிழைக்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.

தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் பிரபலங்கள் தொடங்கி அனைவரும் தங்கள் வீடுகளிலையே முடங்கி உள்ளனர். இந்நிலையில் மக்களை ஆக்டிவாக வைத்திருப்பதற்காக நடிகை குஷ்பூ தனது ட்விட்டரில் கருத்து ஒன்றை பதிவு செய்திருந்தார். அதில், இதுபோன்ற சமயங்களில் உங்கள் உடலை நீங்கள் ஆக்டிவாக வைத்திருக்க நீங்கள் அதிக விலை உயர்ந்த ஜிம்மிற்கு செல்ல வேண்டும் என்கிற அவசியம் இல்லை.

இதுபோன்ற ஒர்கவுட்களை நீங்கள் வீட்டிலேயே செய்யலாம். ஒரு நாளை பாசிடிவ் ஆன விதத்தில் துவங்க இது ஒரு சிறந்த வழி. இன்றே துவங்குங்கள்.. தாமதம் ஆகிவிடவில்லை. அதுக்கு நான் கேரன்டி என அந்த ட்விட்டில் பதிவு செய்திருந்தார் குஷ்பு.

ஆங்கிலத்தில் எழுதியிருந்த குஷ்பூ அதில் "not" என்ற ஆங்கில வார்த்தையை டைப் செய்ய மறந்துவிட்டார். இதனால் அந்த பதிவின் அர்த்தமே மாறி, அதிக விலை உயர்ந்த ஜிம்மிற்கு போக வேண்டும் என மாறிவிட்டது. இதனை பலரும் அவரிடம் சுட்டி காட்ட, தற்போது அதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார் குஷ்பு.

ஆக்டிவாக இருக்கும் சிலர் டைப் செய்யும்போது சில வார்த்தைகளை விட்டுவிடுவது வழக்கமான ஓன்று. காரணம், அவர்களது கையை விட மூளை வேகமாக இருக்கும். அப்படிப்பட்டவர்தான் நான். தவறுக்காக மன்னித்துவிடுங்கள் என பதிவிட்டுள்ளார்.


Advertisement