
kushbu will act in serial??
பிரபல தொலைக்காட்சியில் பிரமாண்டமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் "லக்ஷ்மி ஸ்டோர்ஸ்" இந்த பிரமாண்ட தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. மேலும் அந்த சீரியலில் நடிகை குஷ்பு நடிப்பதால் மக்களிடையே பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது.
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 18-ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த நிலையில் நடிகை குஷ்பு தேர்தலில் நிற்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீரியலில் பிரமாண்டமாக நடித்துவரும் குஷ்பு தேர்தல் வேளையிலும் ஈடுபடவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது இரண்டிலும் ஒரே நேரத்தில் நடிகை குஷ்பு செயல்பட முடியாத காரணத்தால் தான் லக்ஷ்மி ஸ்டோர்ஸ் சீரியலில் குஷ்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் காட்சி கொண்டுவந்துள்ளனர்.
இந்தநிலையில் தேர்தல் வரை நடிகை குஷ்பு அந்த சீரியலில் அதிகமாக நடிக்கமாட்டார் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் நடிகை குஷ்புவிற்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தேர்தல் வரை லக்ஷ்மி ஸ்டோர்ஸ் தொடரில் நடிகை குஷ்புவை காண்பது அரிது தான் என ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.
Advertisement
Advertisement