உடற்பயிற்சிக்கு பிறகு மேக்கப் இல்லாமல் நடிகை குஷ்பு வெளியிட்ட புகைப்படம்.! எப்படி இருக்காரு பார்த்தீர்களா.!!

உடற்பயிற்சிக்கு பிறகு மேக்கப் இல்லாமல் நடிகை குஷ்பு வெளியிட்ட புகைப்படம்.! எப்படி இருக்காரு பார்த்தீர்களா.!!


kushbu-shared-her-photo

தமிழ் சினிமாவில் வருஷம் 16 என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை குஷ்பு. இதனையடுத்து நடிகை குஷ்பு 80ஸ் காலகட்டங்களில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போதுவரை ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் அவர் வெள்ளித்திரையில் மட்டுமின்றி சின்னத்திரையிலும் களமிறங்கி பல தொடர்களில் நடித்துள்ளார். நடிகை குஷ்பு தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகும் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

சினிமாவையும் தாண்டி அரசியலிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். திமுகவில் தனது அரசியல் பயணத்தை துவங்கி, காங்கிரஸ் கட்சிக்கு சென்று, தற்போது பாஜகவில் இணைந்திருக்கும் நடிகை குஷ்பு நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். சமூகவலைத்தளத்தில் பிசியாக இருக்கும் நடிகை குஷ்பு தற்போது, அவர் உடற்பயிற்சிக்கு பிறகு மேக்கப் இல்லாமல் எடுத்த புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தின் புரொபைல் பிக்சராக வைத்துள்ளார். பலரும் சூப்பர் மேடம் என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.