3 சர்ஜரி.. உடல் எடையை குறைக்க இதுதான் காரணம்.! போட்டுடைத்த நடிகை குஷ்பூ!!

80'ஸ் காலகட்டத்தில் டாப் நாயகியாக வலம் வந்தவர் நடிகை குஷ்பூ. அவர் தற்போது படங்கள் தயாரிக்கும் பணிகளிலும், அரசியலிலும் பிசியாக ஈடுபட்டு வருகிறார். மேலும் சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார். குஷ்பூ தற்போது உடல் எடை குறைந்து மிகவும் இளமையாக உள்ளார்.
இனிப்புனா ரொம்ப பிடிக்கும்
இந்நிலையில் அண்மையில் பேட்டி ஒன்றில் அவர் உடல் எடை குறைத்தது குறித்து கூறியுள்ளார். அவர் கூறியதாவது, எனக்கு இனிப்பு என்றால் மிகவும் பிடிக்கும். எங்கேயாவது இனிப்பை பார்த்தால் உடனே ஆசையாக வாயில் எடுத்து போட்டுக் கொள்வேன். அதனால் எனது உடல் எடை அதிகமாகிவிடும். பின் கஷ்டப்பட்டு எடையை குறைப்பேன். ஒரு கட்டத்தில் எனது உடலைக் குறித்து நன்கு புரிந்து கொண்டேன்.
இதையும் படிங்க: தொட்டு தொட்டு பேசும் சுல்தானா.. அசத்தல் அழகு.! இளசுகளை சொக்கி இழுக்கும் நடிகை பிரியா வாரியர்.!
உடல் எடையை குறைக்க காரணம்
எனக்கு அதிர்ஷ்டவசமாக சுகர், பிபி என எதுவும் கிடையாது. ஆனால் முட்டியில் பிரச்சனை இருக்கிறது. எனது முட்டியில் அடிபட்டதால் மூன்றுமுறை சர்ஜரி நடைபெற்றுள்ளது.பின்னரே டாக்டர் என்னிடம் உங்களது முட்டிக்காகவாது நீங்கள் எடையை குறைக்க வேண்டும் என கூறினார்.
உணவு கட்டுப்பாடு
அதன் பின்னர்தான் தினமும் வாக்கிங் சென்றேன்.ஸ்வீட்ஸ் சாப்பிடுவதை நிறுத்தி உணவு கட்டுப்பாட்டை கொண்டு வந்தேன். ஒரு வேலை சாப்பிடுவதற்கு பதில் அதையே 6 முறை பிரித்து கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடுவேன். எல்லோரும் குஷ்பூ இட்லி போல இருந்தால்தான் நன்றாக இருக்கும் என கூறுவர். ஆனால் அது எவ்வளவு சிக்கலை கொண்டு வரும் என நமக்குதான் தெரியும்'. என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: அப்படியொரு அன்பு.! ஷெர்யர் மற்றும் யுகாவை தத்தெடுத்த நடிகர் சிவகார்த்திகேயன்.! பாராட்டும் ரசிகர்கள்!!