அப்படியொரு அன்பு.! ஷெர்யர் மற்றும் யுகாவை தத்தெடுத்த நடிகர் சிவகார்த்திகேயன்.! பாராட்டும் ரசிகர்கள்!!



actor-sivakarthickeyan-adopt-lion-and-tiger-in-vandaloo

 சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து தனது விடாமுயற்சியால்,தீராத உழைப்பால் தற்போது வெள்ளித்திரையில் முன்னணி நாயகனாக கொடிகட்டி பறப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவருக்கென சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக வெளிவந்த அமரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்று செம ஹிட் ஆனது.

வெள்ளித்திரையை கலக்கும் சிவகார்த்திகேயன்

அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள மதராஸி என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் செப்டம்பர் 5 வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அவர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் பராசக்தி என்ற படத்திலும் நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

sivakarthickeyan

சிங்கம் மற்றும் புலி தத்தெடுப்பு

இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இருந்து 'ஷெர்யர்' என்ற சிங்கத்தையும், ‘யுகா’ என்ற புலியையும் 3 மாதங்களுக்கு தத்தெடுத்துள்ளார்.  உணவு மற்றும் கவனிப்பு என அனைத்து பராமரிப்பு செலவுகளையும் அவரே ஏற்றுள்ளார். இவ்வாறு சிவகார்த்திகேயன் கடந்த 2021ஆம் ஆண்டு யானை மற்றும் சிங்கத்தை தத்தெடுத்திருந்தார்.

இதையும் படிங்க: யார்ரா அந்த பொண்ணு.! சச்சின் ரீ ரிலீசில் வலைவீசி தேடிய ரசிகர்கள்.! வெளிவந்த சர்ப்ரைஸ் வீடியோ.!

இதையும் படிங்க: எல்லாம் வதந்தி.. என் வாழ்க்கையோட விளையாடாதீங்க.! ஆவேசமடைந்த நடிகை பவித்ரா லட்சுமி.!