யார்ரா அந்த பொண்ணு.! சச்சின் ரீ ரிலீசில் வலைவீசி தேடிய ரசிகர்கள்.! வெளிவந்த சர்ப்ரைஸ் வீடியோ.!



sachin-sub-actress-rashmi-post-video-for-fans

கடந்த 2005 ஆம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்று மாஸ் ஹிட் கொடுத்த திரைப்படம் சச்சின். இப்படத்தை ஜான் மகேந்திரன் இயக்கியிருந்தார. மேலும் கலைப்புலி தாணு சச்சின் படத்தை தயாரித்திருந்தார். படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.சச்சின் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்தது. 

ரீ-ரிலீசான சச்சின்

 

படத்தில் விஜய்க்கு ஜோடியாக, ஹீரோயினாக ஜெனிலியா நடித்திருந்தார். மேலும் வடிவேலு, ரகுவரன், சந்தானம், பிபாஷா பாசு உள்ளிட்ட பலரும் முக்கிய ரோலில் நடித்திருந்தனர். வடிவேலு மற்றும் விஜய் காம்போவில் காமெடிகள் அனைத்தும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தது.படம் 20 ஆண்டுகள் நிறைவு செய்ததை கொண்டாடும் விதமாக சச்சின் திரைப்படம் கடந்த 18ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டது. 

இதையும் படிங்க: ரீ-ரிலீசாகி கொண்டாடப்படும் தளபதியின் சச்சின்.! 2 நாட்களில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா??

ட்ரெண்டான ஜெனிலியா தோழி

 

சச்சின் படத்தில் ஜெனிலியாவுக்கு தோழியாக ஸ்மிரிதி என்ற கதாபாத்திரத்தில் ராஷ்மி என்பவர் நடித்திருந்தார். படம் ரீ-ரிலீஸில் அவரை ரசித்துப் பார்த்த ரசிகர்கள் யார் அந்த பெண் என இன்ஸ்டாவில் தேட துவங்கினர். மேலும் அவரது சீன்களை மட்டும் எடிட் செய்து இணையத்தில் வைரலாக்கினர். இந்நிலையில் ராஷ்மி, தான் படத்தில் நடித்தது  குறித்து பெருமையாகவும்,  20 ஆண்டுகளுக்கு பிறகு சச்சின் படத்தை கொண்டாடுவது மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் தன்னை தேடி அங்கீகாரம் கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தும் வீடியோ வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.


இதையும் படிங்க: ரீ-ரிலீசாகி கொண்டாடப்படும் தளபதியின் சச்சின்.! 2 நாட்களில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா??