தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் திடீர் மறைவு.! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!
எல்லாம் வதந்தி.. என் வாழ்க்கையோட விளையாடாதீங்க.! ஆவேசமடைந்த நடிகை பவித்ரா லட்சுமி.!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை பவித்ரா லட்சுமி. அவர் நாய் சேகர், ஓகே கண்மணி போன்ற படங்களில் நடித்துள்ளார். அவர் சில ஆல்பம் பாடல்களுக்கும் நடனமாடியுள்ளார்.
பிளாஸ்டிக் சர்ஜரி செய்தாரா பவித்ரா
இந்த நிலையில் நடிகை பவித்ரா லட்சுமி அதிகளவில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதாகவும், அதனால் ஏற்பட்ட உடல் அலர்ஜியால் தற்போது அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியது. இந்த நிலையில் இதுகுறித்து பவித்ரா லட்சுமி விளக்கம் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: ரீ-ரிலீசாகி கொண்டாடப்படும் தளபதியின் சச்சின்.! 2 நாட்களில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா??
எல்லாம் வதந்தி
அவர் கூறியதாவது, நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தேன் என்பது உண்மை கிடையாது. மேலும் அதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு நான் எந்த சிகிச்சையும் பெற்று வரவில்லை. தயவுசெய்து யாரும் இதுபோன்ற வதந்திகளை பரப்பாதீர்கள். உங்களது பொழுதுப்போக்கிற்காக எனது வாழ்க்கையோடு விளையாட வேண்டாம். எனக்கும் எதிர்காலம் உள்ளது என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: அரசியல் குடும்பத்தில் இணைந்த பிரியங்கா.! அவரது கணவர் குறித்து வெளிவந்த முக்கிய பின்னணி!!