"சிங்கிள் தான் கெத்து, திருமணம் வேண்டாம்" அடம்பிடிக்கும் நடிகைகள்..
திரையுலகில் முன்னணியில் இருக்கும் பல ஹீரோயின்களுக்கு, 40 வயதுக்கு அருகில் ஆகியும் இன்னும் திருமணம் ஆகவில்லை என்ற சுவாரசிய தகவல் ஒன்று வெளியாகி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளது.
அந்த வகையில், தற்போதும் முன்னணி நடிகையாக இருப்பவர் த்ரிஷா. தற்போது 34 வயதாகும் த்ரிஷா, கடைசிவரை திருமணமே செய்துகொள்ளாமல் வாழ போவதாகத் தெரிவித்துள்ளார். அதே போல், 37 வயதாகும் சதாவுக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை.
சினிமா மற்றும் அரசியலில் ஆர்வம் கொண்டுள்ள 34 வயதாகும் திவ்யா ஸ்மந்தனாவும் இறுதிவரை திருமணம் செய்துகொள்ளப் போவதில்லை என்று கூறியுள்ளார். 33 வயதாகும் ராய் லட்சுமி, 34 வயதாகும் தமன்னா ஆகியோரும் சினிமாவில் தான் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
36 வயதாகும் ஸ்ருதி, விரைவில் காதலனைத் திருமணம் செய்யப்போவதாக நம்பப்படுகிறது. மேலும் 31 வயதாகும் கீர்த்தி சுரேஷ், 30 வயதாகும் சாய் பல்லவி, 36 வயதாகும் ஆண்ட்ரியா ஆகியோரும் திருமணம் செய்துகொள்ளப் போவதில்லையாம். 40 வயதாகும் அனுஷ்காவிற்கு வரன் பார்த்துக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது