ஒருவேளை இது அதுவா இருக்குமோ.. ரசிகர்களிடையே பெரும் குழப்பத்தை உண்டாக்கிய கோலியின் பதிவு, என்ன தெரியுமா ?



koli movie poster leaked

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருப்பவர் விராட் கோலி. இவர் இந்திய அணியின் பேட்டிங்கின் முதுகெலும்பாக உள்ளார் .

மேலும் இவர் சென்ற வருடம் பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆசிய கிரிக்கெட் தொடரில் பங்கேற்காமல் ஓய்வில் இருந்து வருகிறார்.

அதுமட்டுமின்றி கோலி பல்வேறு விளம்பரங்களிலும் நடித்து வந்தார் மேலும்  தனது மனைவி அனுஷ்காவுடனும் சில விளம்பரங்களில் நடித்துள்ளார். இவர்  தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய  போஸ்டர் ஒன்றினை வெளியிட்டுள்ளார். அது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும்,குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது ,

அந்தப்பதிவில்  WRONG PRODUCTION வழங்கும் TRAILER: THE MOVIE  என்ற படத்திற்கான போஸ்டர் போன்று வெளியிடப்பட்டுள்ளது.மேலும் அதே பதிவில் இப்படம் 28 ஆம் தேதி வெளியாகும் என்றும்  ”பத்து ஆண்டுகளுக்கு பிறகு அடுத்த அறிமுகம், காத்திருக்க முடியவில்லை” என்றும்  பதிவிட்டிருக்கிறார். 


 இது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது .