
kiss to-actor
இந்தி பட உலகில் பிரபல டைரக்டராக இருக்கும் சுபாஷ் கை போதை பொருள் கொடுத்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் ஒருவர் கூறி இருந்தார். இப்போது நடிகையும், மாடல் அழகியுமான கேட் சர்மாவும் சுபாஷ் கை பாலியல் தொல்லை கொடுத்ததாக போலீசில் புகார் அளித்துள்ளார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது.
“என்னை சுபாஷ் கை அவரது வீட்டுக்கு அழைத்தார். நான் அங்கு சென்றபோது 5, 6 பேர் இருந்தனர். அவர்கள் முன்னால் தனக்கு மசாஜ் செய்துவிடும்படி கூறினார். நானும் பெரிய டைரக்டர் என்பதால் மறுக்கவில்லை. சில நிமிடங்கள் அவருக்கு மசாஜ் செய்துவிட்டு கை கழுவுவதற்காக பாத்ரூம் சென்றேன்.
என் பின்னாலேயே சுபாஷ் கையும் வந்துவிட்டார். உன்னிடம் ஒரு விஷயம் பேச வேண்டும் என்று சொல்லி எனது கையை பிடித்து இழுத்துக்கொண்டு அவரது அறைக்கு சென்றார். அங்கு என்னை கட்டாயப்படுத்தி முத்தம் கொடுக்க முயன்றார். நான் அவர் பிடியில் இருந்து விடுபட்டு கிளம்ப தயாரானேன். உடனே இன்று இரவு என்னுடன் தங்காவிட்டால் படத்தில் அறிமுகம் செய்ய மாட்டேன் என்று மிரட்டினார்.”
Advertisement
Advertisement