சினிமா

நடிகர் பிரபாஸின் பிரமாண்ட படத்தில் நடிக்கவிருக்கும் பிரபல நடிகைக்கு கொரோனா உறுதி! அவரே வெளியிட்ட ஷாக் தகவல்!

Summary:

பிரபல பாலிவுட் நடிகை கீர்த்தி சனானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தெலுங்கில் மகேஷ்பாபு நடிப்பில் வெளிவந்த நேனொக்கடேன் படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் கீர்த்தி சனோன். அதனை தொடர்ந்து பாலிவுட்டில் களமிறங்கிய அவர் இந்தியில் ஷாருக்கானின் தில்வாலே, அர்ஜுன் பாட்டியாவுடன் ஹவுஸ்புல் 4 மற்றும் ஹீரோபண்டி, பானிபட் உள்பட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உள்ளார்.

இந்நிலையில் அவர் தற்போது மி மி என்ற படத்திலும்,500 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகும் பிரபாஸின் ஆதிபுருஷ் படத்திலும் கதாநாயகியாக நடிக்க உள்ளார். இந்நிலையில் கீர்த்தி சனான் சில தினங்களுக்கு முன்பு  சண்டிகரில் நடைபெற்ற படப்பிடிப்பில் பங்கேற்று விட்டு மும்பை திரும்பியுள்ளார். அதனை தொடர்ந்து அவருக்கு காய்ச்சல்,சளி பிரச்சினை இருந்துள்ளது. பின்னர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் தொற்று இருப்பது உறுதியானது. 

இதனை தொடர்ந்து கீர்த்தி சனான் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராமில் நான் நலமாக உள்ளேன். என்னை பற்றி கவலைப்பட வேண்டாம். இதனை கடந்து விரைவில் பணிக்கு திரும்புவேன். உங்களது அன்பு மற்றும் வாழ்த்துக்களை படித்து வருகிறேன். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என தெரிவித்துள்ளார். 


Advertisement