சினிமா

தளபதி 64 வது படத்தில் விஜய்க்கு ஜோடியாகும் பிரபல சர்ச்சை நடிகை.! யார் தெரியுமா?

Summary:

kiaraa advani act as pair to vijay in next movie

விஜய் தற்போது தனது 63 படமாக அட்லீ கூட்டணியில் மூன்றாவது முறையாக இணைந்து பிகில் என்ற படத்தில் நடித்து வருகிறார். நயன்தாரா ஜோடியாக நடிக்க, கால்பந்தாட்டத்தை மையமாக கொண்டு உருவாகும் இந்த திரைப்படம் தீபாவளி அன்று ரிலீசாகவுள்ளது.

இதனை தொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 64வது படத்தில் நடிக்கவுள்ளார். மேலும் பிவி கம்பைன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.  இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் துவங்கவுள்ளது என தகவல் வெளியானது.

bigil movie க்கான பட முடிவு

மேலும் இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக  மலையாள நடிகர் அந்தோணி வர்கீஸ் ஒப்பந்தமாகியுள்ளதாக சமீபத்தில்  தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து தற்போது விஜய் 64 வது படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அதற்காக அவரிடம் படக்குழுவினர் தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது .

நடிகை கியாரா அத்வானி நெட்பிளிக்ஸில் வெளியான லஸ்ட் ஸ்டோரீஸில் சுய இன்பம் அனுபவிக்கும் காட்சி ஒன்றில் நடித்து பெரும் சர்ச்சைக்குள்ளானவர்.


Advertisement