மீண்டும் ஒரு இளம் பெண் சினிமா பிரபலம் மரணம்! சோகத்தில் திரையுலகம்!

மீண்டும் ஒரு இளம் பெண் சினிமா பிரபலம் மரணம்! சோகத்தில் திரையுலகம்!


kerala-young-female-director-naiyana-suriyan-death

திரையுலகில் கொலைகளும், தற்கொலைகளும் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் பிரபல மலையாள துணை இயக்குனர் ஒருவர் வீட்டில் மர்மமான முறையில் இறந்துள்ள சம்பவம் அதிற்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல இயக்குநரான லெனின் ராஜேந்திரனிடம் உதவி இயக்குநராகவும், அவரது தனிப்பட்ட உதவியாளராகவும் பணியாற்றியவர் நயனா சூரியன். இவர் சமீபத்தில் இயக்கிய திரைப்படம் "பக்‌ஷிகளுடே மணம்". திருமணத்திற்கு பிறகு பெண்களின் சுந்தந்திரம் பற்றி பேசக்கூடிய படம் இது.

murder case

இவர் கேரளாவில், திருவனந்தபுரம் அருகில் உள்ள  வெள்ளையம்பலத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார். நேற்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவரது பெற்றோர் அவருக்கு போன் செய்துள்ளனர். அவர் எந்த போனையும் எடுக்காததால் அவரது நண்பர்கள் உதவியுடன் நயனா சூரியன் இருந்த வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர்.

வீடு பூட்டப்பட்டு இருந்ததால், வீட்டின் உரிமையாளர் உதவியுடன் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது நயனா சூரியன் பேச்சு மூச்சின்றி கிடந்துள்ளார். உடனே, அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். நயனா சூரியன்யனை பரிசோதித்த மருத்துவர்கள் இவர் இறந்து 7 மணி நேரம் ஆகிவிட்டதாக கூறினார்.

murder case

இதனை அடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மரணத்திற்கு காரணம் கொலையா, தற்கொலையா அல்லது இயற்கை மரணமா என விசாரித்து வருகின்றனர்.