13 வருட காதல்.! நடிகர் அர்ஜுனின் இரண்டாவது மகளுக்கு திருமணம்.! மாப்பிள்ளை யார் பார்த்தீங்களா!!
நடிகை கீர்த்திசுரேஷ்க்கு அடித்த மாபெரும் அதிர்ஷ்டம்! அதுவும் யார் கையில் பார்த்தீர்களா! வைரலாகும் புகைப்படம்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். சிவகார்த்திகேயனுடன் இணைந்து அவர் நடித்த ரஜினிமுருகன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதன் மூலம் கீர்த்தி சுரேஷ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அதனை தொடர்ந்து அவர் மேலும் விஜய், விக்ரம், விஷால் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.
கீர்த்தி சுரேஷ் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய அளவில் ஏராளமான மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் சமீபகாலமாக நடிப்புக்கு மட்டும் முக்கியத்துவம் தரும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இவ்வாறு இவர் நடித்த நடிகையர்திலகம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று பல பிரபலங்களும் இவருக்கு வாழ்த்து கூறினர்.
2018 ல் மறைந்த பிரபல நடிகை சாவித்திரி வாழ்கை வரலாற்று படமான மகாநதிக்கு அண்மையில் சிறந்த இயக்குனர், சிறந்த நடிகை, சிறந்த நடிகர் என ஏராளமான ஃபிலிம் பேர் விருதுகள் வழங்கப்பட்டது. இந்நிலையில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை நடிகை கீர்த்தி சுரேஷுக்கு துணைக்குடியரசு தலைவர் வெங்கய்யா நாடு அவர்கள் வழங்கி சிறப்பித்துள்ளார். அந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Congrats @KeerthyOfficial mam on winning the #NationalFilmAwards for #Mahanati.. Best Actress 👌👏 pic.twitter.com/KIcjkGFFFw
— Priya - PRO (@PRO_Priya) December 23, 2019