பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது கீர்த்தி சுரேஷ் எப்படி இருந்துருகிறார் பாருங்கள்.. ஸ்கூல் பாப்பா கீர்த்தி சுரேஷ்..!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த 'ரஜினி முருகன்' படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். ரசிகர்களிடம் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, ரெமோ, தொடரி, பைரவா, என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.
தெலுங்கில் இவரது நடிப்பில் வெளியான "மகாநடி" படம் கீர்த்திக்கு பேரும் , புகழும் பெற்றுத்தந்ததுடன் சிறந்த நடிகையாக அடையாளம் காட்டியது. இந்த படத்திற்கு பிறகு இந்திய அளவில் கவனிக்கத்தக்க நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார் கீர்த்தி சுரேஷ்.
தற்போது தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய படங்களில் கலக்கிவருகிறார். தற்போது கொரோனா ஊரடங்கில் வீட்டில் இருந்து வரும் கீர்த்தி சுரேஷ் சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார்.
இதனிடையே கீர்த்தியின் பள்ளி பருவ புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது. ஸ்கூல் யூனிபார்மில் இருக்கும் இந்த போட்டோ ரசிகர்களை ஈர்த்து வருகிறது.