சினிமா

பாஜக வை சேர்ந்த பிரபல தொழிலதிபர் மகனுக்கு மனைவியாகிறார் கீர்த்தி சுரேஷ்..? விரைவில் திருமணம்..! திரையுலக பிரபலம் கூறிய ரகசியம்..!

Summary:

Keerthi suresh marry BJP business man son soon

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகிகளில் ஒருவராக வலம்வருபவர் கீர்த்தி சுரேஷ். இவருக்கென ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். தமிழில் இவர் நடித்த சர்க்கார் படத்திற்கு பிறகு வேறு எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. சர்க்கார் படத்திற்கு பிறகு ஓய்வு எடுப்பதாக சென்றார் கீர்த்தி சுரேஷ்.

இதனை தொடர்ந்து தற்போது ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில், விரைவில் கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் நடைபெற இருப்பதாக செய்திகள் வெளியாகிவருகிறது. பிரபல நடிகரும், செய்தியாளருமான பயில்வான் ரெங்கநாதன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள தகவலில், பாஜக கட்சியை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவரின் மகனுடன் கீர்த்தி சுரேஷுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக கூறியுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெறுவதாகவும், விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் எனவும் அவர் கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.


Advertisement