சினிமா

கீர்த்தி சுரேஷா இது.? என்ன இப்படி இருக்கார்..? அவரே வெளியிட்ட மேக்கப் இல்லாத புகைப்படம்.!

Summary:

Keerthi suresh latest without makeup photo

உடற்பயிற்சி செய்து முடித்தகையோடு தனது மேக்கப் இல்லாத புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இது என்ன மாயம் என்ற தமிழ் படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்துவருகிறார். ஹிந்தியில் மிஸ் இந்தியா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். கொரோனா ஊரடங்கு காரணமாக அந்த படம் வெளியாவது தாமதமாகியுள்ளது.

அதேபோல் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துவரும் அண்ணாத்த படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துவருகிறார் கீர்த்தி சுரேஷ்.  கடந்த சில படங்களில் உடல் எடை சற்று கூடி, ரசிகர்களின் விமர்சனத்துக்கு ஆளான இவர் தற்போது உடல் எடையை முற்றிலும் குறைத்து பார்ப்பதற்கே மிகவும் வித்தியாசமாக உள்ளார்.

இந்நிலையில் உடற்பயிற்சி செய்த நிலையில் தனது மேக்கப் இல்லாத புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ். அந்த புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள், நீங்கள் சற்று குண்டாக இருந்தால்தான் அழகாக இருப்பீர்கள் என கமெண்ட் செய்துவருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.


Advertisement