காவாலா பாட்டு எல்லாம் ஓரம் போ!! வந்துட்டா மோனிகா.. வைரலாகும் லேட்டஸ்ட் பாடல்.
கொழு கொழு கன்னங்கள் எங்கே கீர்த்தி சுரேஷ்.? உடல் மெலிந்து, உருகிபோய் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிய கீர்த்தி சுரேஷ்.! கவலையில் ரசிகர்கள்.!

சிவகார்த்திகேயனுடன் ரஜினி முருகன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். கேரளாவை பூர்விகமாக கொண்ட இவர் தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் முன்னணி நாயகியாக உள்ளார்.
தமிழ் சினிமாவை பொறுத்தவரை விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ் என பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார். கடைசியாக தளபதியுடன் சர்க்கார் படத்தில் நடித்திருந்தார் கீர்த்தி சுரேஷ். இதனிடையே உடல் ஏற்றை சற்று அதிகமான இவர், பல்வேறு கேலி கிண்டல்களுக்கு ஆளானார்.
இதனால் நடிப்பிற்கு இடைவெளிவிட்டுவிட்டு உடல் எடையை குறைப்பதில் கவனம் செலுத்தினார். இதில் சற்று அதிகமாகவே கவனம் செலுத்திவிட்டார் போல கீர்த்தி சுரேஷ். தற்போது உடல் எடை மிகவும் மெலிந்து, பார்ப்பதற்கே மிகவும் வித்தியாசமாக தெரிகிறார் கீர்த்தி.