நிஜமாவா?? தளபதி விஜய்யுடன் மீண்டும் அந்த நடிகையா?? மூன்றாவது முறையாக கூட்டணி சேரும் மாஸ் நடிகை!!

நிஜமாவா?? தளபதி விஜய்யுடன் மீண்டும் அந்த நடிகையா?? மூன்றாவது முறையாக கூட்டணி சேரும் மாஸ் நடிகை!!



Keerthi suresh joining with vijay 3rd time

விஜய் நடிக்க இருக்கும் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகிவருகிறது.

தற்போது சன் பிக்சர்ஸ் தயாரில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்துவருகிறார் விஜய். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துவருகிறார். படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவந்தநிலையில், தற்போது கொரோனா காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தளபதி 65 படத்தை அடுத்து, விஜய் அடுத்ததாக பிரபல தெலுங்கு பட இயக்குநர் வம்சி பைடி பல்லி இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான ‘தோழா’ படத்தை வம்சி பைடி பல்லி இயக்கி இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

keerthi Suresh

இந்நிலையில் அவர் விஜய்யை இயக்க இருப்பதாகவும், இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே பைரவா, சர்க்கார் போன்ற படங்களில் கீர்த்தி சுரேஷ் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படமும் உறுதியாகும் பட்சத்தில் இது அவர்கள் இணையும் மூன்றாவது படம் ஆகும்.