பாரம்பரிய சேலை..! கம்பீர தோற்றம்..! வைரல் ஆகும் கீர்த்தி சுரேஷின் நியூ லுக் புகைப்படம்..!

பாரம்பரிய சேலை..! கம்பீர தோற்றம்..! வைரல் ஆகும் கீர்த்தி சுரேஷின் நியூ லுக் புகைப்படம்..!


keerthi-suresh-in-new-look-photo-goes-viral

தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார் கீர்த்தி சுரேஷ். 2018 ஆம் ஆண்டு வரிசையாக படங்கள் நடித்த இவர் கடந்த வருடம் ஒரு படங்களில் கூட நடிக்கவில்லை. சர்க்கார் படத்திற்கு பிறகு நீண்ட ஓய்வில் இருந்த கீர்த்தி சுரேஷ் தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.

அடுத்தாக சன் பிக்சர்ஸ் தயாரிக்கும், ரஜினி நடிக்க உள்ள படத்தில் கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் இயக்குனர் ப்ரியதர்ஷன் இயக்கத்தில், 
மலையாளத்தில் மரக்கார் அரபிக்கடலின்டே சிம்மம் எனும் படத்தில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். இந்த படத்தில் நாயகனாக மோகன் லால் நடித்துள்ளார்.

keerthi Suresh

இந்நிலையில் மிகவும் பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த படத்தின் போஸ்ட்டர் மற்றும் படம் வெளியாகும் தேதி குறித்து தனது டிவிட்டரில் படம் தயாரிப்பு நிறுவனம் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளது. அந்த புகைப்படத்தில், பண்டையகால தோற்றத்துடன் சேலை, ஜாக்கெட் அணிந்து வித்யசமான தோற்றத்துடன் உள்ளார் கீர்த்தி சுரேஷ். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.