சினிமா

ஓவர் கியூட்! குட்டி பாப்பாவாக கீர்த்தி சுரேஷ் எம்புட்டு அழகா இருக்காரு! வைரலாகும் அரிய புகைப்படங்கள்!!

Summary:

தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர்

தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். அதனைத் தொடர்ந்து அவர் நடிகர் சிவகார்த்திகேயனுடன் ரஜினிமுருகன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மேலும் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்த அவர் தற்போது முன்னணி நடிகையாக உள்ளார்.

 நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது ரஜினியுடன் அண்ணாத்த  மற்றும் இயக்குனர் செல்வராகவனுடன் சாணி காயிதம் போன்ற படங்களில் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கில் சர்க்காரு வாரி பட்டா , ரங் டே ஆகிய படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில்  சமூகவலைதளங்களில் பிஸியாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் தற்போது தனது அக்கா ரேவதிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி சிறுவயதில் எடுத்த அரிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.
 


Advertisement