கீர்த்தி பாண்டியனின் வித்தியாசமான போட்டோசூட்.. வைரலாகும் புகைப்படம்.!

கீர்த்தி பாண்டியனின் வித்தியாசமான போட்டோசூட்.. வைரலாகும் புகைப்படம்.!



Keerthi pandian photoshoots viral

2019ம் ஆண்டு ஹரிஷ் ராம் இயக்கிய "தும்பா" என்ற சாகசப் படத்தில் அறிமுகமானவர் கீர்த்தி பாண்டியன். தொடர்ந்து இவர் 2021ம் ஆண்டு "அன்பிற்கினியாள்" என்ற படத்தில் நடித்துள்ளார். அடிப்படையில் கீர்த்தி ஒரு பாலே மற்றும் சல்சா நடனக் கலைஞராவார்.

keerthi

மேலும் இவர் 80களில் முன்னணி நடிகராக இருந்த நடிகர் அருண் பாண்டியனின் மகளாவார். தற்போது "கண்ணகி" என்ற திரைப்படத்தில் நடித்திருக்கும் இவர், சமீபத்தில் நடிகர் அசோக் செல்வனைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். 

அசோக் செல்வனும், கீர்த்தி பாண்டியனும் இயக்குனர் பா. ரஞ்சித்தின் "ப்ளூ ஸ்டார்" படத்தில் ஜோடியாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது யஷ்வந்த் கிஷோர் இயக்கத்தில் கீர்த்தி பாண்டியன் நடித்துள்ள "கண்ணகி" திரைப்படம் வரும் டிசம்பர் 15ம் தேதி வெளியாவாகவுள்ளது.

keerthi

இந்நிலையில், இப்படத்தின் ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வரும் கீர்த்தி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  அழகான மாடர்ன் உடையில், செம கூலாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். இவை தற்போது வைரலாகி வருகின்றன.