கவர்ச்சி காட்ட தயங்கும் கயல் ஆனந்தி.. பாராட்டி வரும் ரசிகர்கள்.?

கவர்ச்சி காட்ட தயங்கும் கயல் ஆனந்தி.. பாராட்டி வரும் ரசிகர்கள்.?


Kayal anandhi dont want to acting glamour in movie

சினிமா துறையில் தொடர்ந்து நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்காகவே முதலில் குடும்ப பாங்காக நடித்துவிட்டு பின் உடலழகை காட்டி நடிப்பது திரைத்துறையில் பொதுவான விஷயம்  என்பதாகிவிட்டது.

kayal

ஆரம்பத்தில் திரைப்படங்களில் பாடல்களில் மட்டுமே நடிகைகளை வைத்து கவர்ச்சி நடனங்கள் எடுக்கப்பட்டு வந்தன. தற்போது கதாநாயகிகளே கவர்ச்சியாக நடிக்க தொடங்கியிருக்கிறார்கள்  நடிகைகளின் கவர்ச்சிக்காகவே சில படங்கள் பெரிதாக கதைகளே இல்லாமல் வெற்றி பெற்று வருகிறது.

இது போன்ற நிலையில், 'கயல்' திரைப்படத்தில் நடித்த நடிகை ஆனந்தி இப்படத்தில் இவரின் நடிப்பு பெரிதளவில் பேசப்பட்டு வந்தது. இதன் பிறகு 'பரியேறும் பெருமாள்' திரைப்படத்தில் தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் மக்களின் மனதை கவர்ந்திருந்தார்.

kayal

தற்போது சாந்தனு,கயல் ஆனந்தி கதாநாயகன், கதாநாயகியாக நடித்து திரையரங்கில் வெளியான திரைப்படம் 'ராவணன்  கோட்டம்'. இந்த மூன்று படங்களிலும் பெரிதும் கவர்ச்சி ஏதும் காட்டாமல் நடித்து இன்று வரை சினிமாவில் பிரபலமாக இருக்கிறார் கயல் ஆனந்தி. கவர்ச்சியாக நடித்தால் மட்டுமே சினிமா துறையில் நிலைத்து நிற்க முடியும் என்ற எண்ணத்தை மாற்றி கயல் ஆனந்தி தொடர்ந்து நடித்துக் கொண்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கிறது.