பிக்பாஸ் கவினா இது! எப்படி இருந்த கவின் இப்படி மாறிட்டரே - வைரலாகும் புகைப்படம்

பிக்பாஸ் கவினா இது! எப்படி இருந்த கவின் இப்படி மாறிட்டரே - வைரலாகும் புகைப்படம்



Kavin

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 யில் கலந்து கொண்டு மக்களின் மனதை கவர்ந்தது மட்டுமின்றி ஆர்மியெல்லாம் உருவாக்கும் அளவுக்கு பிரபலமானார் நடிகர் கவின்.

இவர் இதற்கு முன்பு சரவணன் மீனாட்சி என்னும் சீரியலில் நடித்து பிரபலமடைந்தவர். அதன் பிறகு பிக்பாஸில் கலந்துகொண்ட கவின் லாஸ்லியாவுடன் காதல் வயப்பட்டு இன்னும் பிரபலமானார். 

kavin

இவர்களின் காதலுக்கு லாஸ்லியாவின் தந்தை சம்மதம் தெரிவிக்காததால் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு இருவரும் பேசாமல், பார்க்காமல் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது பொங்கல் வாழ்த்து கூறி புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் கவின் மிக மோசமாக ஒல்லியான தோற்றத்தில் தோற்றம் அளிக்கிறார். அதனை பார்த்த ரசிகர்கள் எப்படி இருந்த கவின் இப்படி மாறிட்டரே என கேள்வி எழுப்பியுள்ளனர்.