சினிமா

விஜயின் காவலன் படத்தில் நடித்த நடிகையா இது! தற்போது எப்படி உள்ளார் என்று பாருங்கள் - தீயாய் பரவும் புகைப்படம்.

Summary:

Kavalan vijay mithra

தமிழ் சினிமாவில் 2011 ஆம் ஆண்டு இயக்குனர் சித்திக் இயக்கத்தில் நடிகர் விஜய் - அசன் நடிப்பில் வெளியான படம் தான் காவலன். இந்த படம் வெளியாகி ரசிகர்களிடையே ஒரளவிற்கு நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் நடிகை அசினுக்கு தோழியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை மித்ரா குரியன்.

இவர் கேரளாவை பூர்விகமாக கொண்டவர். கேரள படங்களில் நடித்து பிரபலமானவர். இவர் முதலில் 2008 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவிற்கு ஜோடியாக சாது மிரண்டால் என்ற படத்தில் நடித்திருந்தார்.

அதனை தொடர்ந்து சூரியன் சட்டக்கல்லூரி, கந்தா, புத்தனின் சிரிப்பு போன்ற படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு மீண்டும் மலையாள சினிமாவிற்கு சென்ற மித்ராவிற்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தது.

அதன் பிறகு திருமணம் செய்து குடும்பத்துடன் செட்டிலாகிவிட்டார். தற்போது இவருக்கு ஒரு அழகான குழந்தை உள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு அவரின் கணவர் மற்றும் குழந்தையின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


Advertisement