வளையோசை கலகலக்க.. சமந்தா, நயன்தாராவுடன் பேருந்தில் ஃபுட்போர்டில் தொங்கி சென்ற விஜய் சேதுபதி! வைரலாகும் வீடியோ!!

வளையோசை கலகலக்க.. சமந்தா, நயன்தாராவுடன் பேருந்தில் ஃபுட்போர்டில் தொங்கி சென்ற விஜய் சேதுபதி! வைரலாகும் வீடியோ!!


katthu-vakkula-rendu-kadhal-shooting-spot-video-viral

தமிழ் சினிமாவில் போடா போடி, நானும் ரவுடிதான் மற்றும் தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களை இயக்கிய விக்னேஷ் சிவன் அடுத்ததாக காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற புதிய படத்தை இயக்குகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நடிக்கின்றனர்.

மேலும் லலித்குமார் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசைக்கிறார். முன்னணி பிரபலங்கள் நடிப்பதால் இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது புதுச்சேரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட ஒரு காட்சி வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. சத்யா படத்தில் வளையோசை கலகல என்ற பாடலுக்கு கமல் மற்றும் அமலா பேருந்தில் படியில் தொங்கி செல்வதுபோல, விஜய் சேதுபதி, சமந்தா மற்றும் நயன்தாரா மூவரும் பேருந்தில் புட்போர்டில் தொங்கியவாறு சென்றுள்ளனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.