வாவ்.. அரபிக்குத்து பாடலுக்கு குழந்தைகளுடன் குத்தாட்டம் போட்ட நடிகை கத்ரீனா கைஃப்.! எங்கு தெரியுமா?? வைரல் வீடியோ!!
பாலிவுட் சினிமாவில் பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து பிரபலமான நடிகையாக வலம் வருபவர் கத்ரீனா கைஃப். அவர் கடந்த 2021 ஆம் ஆண்டு பிரபல பாலிவுட் நடிகர் விக்கி கவுசல் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.அவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
திருமணத்திற்கு பிறகும் கத்ரீனா கைஃப் தொடர்ந்து படங்களில்
நடித்து வருகிறார். அவர் தற்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து மெரி கிறிஸ்துமன்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவரை மதுரை உசிலம்பட்டியில் பள்ளி ஒன்றிற்கு கெஸ்டாக அழைப்பு விடுத்துள்ளனர்.
அதனை தொடர்ந்து மிக சிம்பிளாக அங்கே சென்ற கத்ரீனா கைப் மாணவர்களுடன் அரபிக்குத்து பாட்டுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். பின்னர் மேடையில் ஏறிய அவர் அங்கு பள்ளி ஆசிரியர்களுடன் ஜாலியோ ஜிம்கானா பாடலுக்கும் ஆட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
#katrinakaif dance in #Arabickuthu with kids 😍💞
— myqueenkay (@myqueenkay1) September 25, 2022
Mountain View School pic.twitter.com/ogTPMp3rNd