சினிமா

காத்து வாக்குல ரெண்டு காதல்.! 3 நாட்களில் மட்டும் கலெக்ஷன் இவ்வளவா!! வெளிவந்த தகவல்!!

Summary:

காத்து வாக்குல ரெண்டு காதல்.! 3 நாட்களில் மட்டும் கலெக்ஷன் இவ்வளவா!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல். இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். மேலும் இதில் தென்னிந்திய சினிமாவிலேயே டாப் ஹீரோயின்களாக கொடிகட்டி பறக்கும் நயன்தாரா மற்றும் சமந்தா இருவரும் நடித்துள்ளனர்

இப்படத்தை லலித் குமாரின் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனமும், விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.  காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகி.
ரசிகர்கள் மத்தியில் ஓரளவிற்கு நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இந்த நிலையில் இப்படம் வெளியாகி 3 நாட்களில் தமிழ்நாட்டில் படைத்த வசூல் சாதனை குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வெளியாகி மூன்றே நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ 14.5 கோடி கலெக்சன் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


Advertisement