காதர்பாட்சாவை பின்னுக்கு தள்ளிய ஹிப் ஹாப்பின் வீரன்; தென் தமிழகத்திலும் வரவேற்பு இல்லையாம்..!

காதர்பாட்சாவை பின்னுக்கு தள்ளிய ஹிப் ஹாப்பின் வீரன்; தென் தமிழகத்திலும் வரவேற்பு இல்லையாம்..!


kathar-basha-endra-muthuramalingam-vs-hip-cop-veeran-mo

இயக்குனர் முத்தையா - நடிகர் ஆர்யா கூட்டணியில் உருவாகிய திரைப்படம் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம். தென்தமிழகத்தில் கதைக்களம் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியானது. 

ஹிப் ஹாப் தமிழா, வினய் ராய், ஆதிரா ராஜ் ஆகியோர் நடிப்பில், ஏ.ஆர்.கே சரவணன் இயக்கத்தில் உருவான திரைப்படம் வீரன். இந்த படமும் கடந்த 2 நாட்களுக்கு முன் வெளியானது. 

காதர்பாட்சா

ஆர்யா நடிப்பில் வெளியான படத்திற்கு, படம் ரிலீசுக்கு முன்பு நல்ல வரவேற்பு இருந்த நிலையில், படம் ரிலீசுக்கு பின்பு நிலை தலைகீழானது. தெந்தமிழகத்தில் கூட வரவேற்பு இல்லாமல் வசூலில் தடுமாறியுள்ளது. 

வீரன் திரைப்படம் வெளியான 2 நாட்களில் 5.5 கோடி வசூல் செய்துள்ள நிலையில், காதர் பாட்சா திரைப்படம் உலகளவில் 4.5 கோடி வசூல் செய்துள்ளது.