புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
கருப்பன் பட ஹீரோயினா இது.! என்ன இப்படி ஆகிட்டாரே! புகைப்படத்தைக் கண்டு ஷாக்கான ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக, கருப்பன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர் நடிகை தன்யா ரவிச்சந்திரன். இவர் இந்த திரைப்படத்திற்கு முன்பே சசிகுமாருடன் பலே வெள்ளையதேவா, பிருந்தாவனம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
கருப்பன் திரைப்படத்தில் நடிகை தன்யா மிகவும் குடும்பப்பாங்கான பெண்ணாக நடித்திருந்தார். மேலும் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவர் அவ்வப்போது மாடர்ன் உடையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வாயடைக்க வைப்பார். இந்த நிலையில் நடிகை தன்யா கொரோனா லாக்டவுனில் உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறி உள்ளார்.
இந்நிலையில், தற்போது போட்டோஷூட் ஒன்றை நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். மேலும் அதில் முகத்தை சோகமாகவும் வைத்துள்ளார். அதனைக் கண்ட ரசிகர்கள் ஷாக்காகி ஏன் இப்படி ஆகிடீங்க? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.