சினிமா

விபத்தில் உயிரிழந்த முக்கிய நபர்! கதறி கதறி அழுத நடிகர் கார்த்தி! தீயாய் பரவும் வீடியோ!

Summary:

Karthi crying in girl fan dead

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களுடன் ஒருவராக திகழ்பவர் நடிகர் கார்த்தி. இவர் தமிழ்சினிமாவில்  பருத்திவீரன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். மேலும் அவர் நடித்த முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், ஏராளமான விருதுகளையும் பெற்று தந்தது.

அதனை தொடர்ந்து  அவர் பையா,  நான் மகான் இல்லை, சகுனி, ஆயிரத்தில் ஒருவன்,  தீரன் அதிகாரம் 1, கடைக்குட்டி சிங்கம் மற்றும் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். மேலும் கார்த்தி நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு வெளிவந்த படம் கைதி. திரில்லர் கலந்த ஆக்சன் படமான கைதி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து அவர் தனது அண்ணியுடன் இணைந்து தம்பி என்ற படத்தில் நடித்து வருகிறார். இவருக்கென பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில் நேற்று கார்த்தியின் மக்கள் மன்ற நிர்வாகியான  நித்யா என்பவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இதுகுறித்த தகவலை அந்த நடிகர் கார்த்தி  அவரது வீட்டிற்கு நேரில் சென்று குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். மேலும் அங்கு அவர்  தேம்பி தேம்பி அழுதுள்ளார்.இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.


Advertisement