இந்தியா சினிமா

கர்ப்பிணியாக நடித்து வரும் பிரபல நடிகை; வெளியான புகைப்படம்.!

Summary:

karena kapoor - new flim - pragenent lady

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையான கரீனா கபூர் தான் நடிக்கும் புதிய படத்தில் கர்ப்பிணிப் பெண்ணாக நடித்து வருகிறார்.

ஏராளமான பாலிவுட் சினிமாக்கள் மற்றும் விளம்பரப் படங்களில் நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகை கரீனா கபூர். 2012 ஆம் ஆண்டு நடிகர் சைப் அலிகானை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தைமூர் என்ற அழகான ஆண் குழந்தை உள்ளது.

இல்லற வாழ்க்கையை சிறப்பாக நடத்தி வரும் கரீனா அதே நேரத்தில் சினிமாவிலும் கவனத்தை செலுத்தி வருகிறார். இந்நிலையில் ‘குட் நியூஸ்’ என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். வாடகைத் தாயை மயமாக கொண்ட கதையான இப்படத்தில் அக்ஷய் குமாரும் நடித்து வருகிறார். 

இப்படத்திற்காக கர்ப்பிணிப் பெண்ணாக நடித்து வரும் கரீனா கபூரின் புகைப்படம் தற்சமயம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Advertisement