சினிமா

தண்ணீரில் முதலையிடம் சிக்கி தவிக்கும் 4 கன்னிகளின் கன்னித்தீவு புகைப்படம்!

Summary:

Kannitheevu first look

வரலட்சுமி, சுபிக்ஷா, ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா ஜாவேரி ஆகிய பெண்கள் நடிக்கும் கன்னிதீதீவின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது.

கன்னித்தீவு என்ற பெயர் தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான பெயர். அதோடு கன்னித்தீவு என்றாலே திகில் நிறைந்தது என்பது அனைவரும் அறிந்ததே.

தற்போது 4 பெண்களை மையமாக வைத்து இயக்குனர் சுந்தரபாலு கன்னித்தீவு என்ற படத்தினை இயக்கி வருகிறார். அந்த 4 பண்களாக நடிகைகள் வரலட்சுமி, சுபிக்ஷா, ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா ஜாவேரி ஆகியோர் நடிக்கின்றனர்.

கன்னித்தீவு பெயருக்கு பொருத்தமாக படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை ஒரு தீவில் படமாக்க திட்மிட்டிருக்கிறோம் என இயக்குனர் சுந்தர்பாலு தெரிவித்திருந்தார். தற்போது அதனை உறுதிசெய்யும் விதமாக இந்தபடத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. இதனை நடிகர் ஆர்யா ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.


வட சென்னையில் உள்ள ஒரு ஹவுசிங் போர்டு குடியிருப்பில் வசிக்கும் நான்கு பெண்களை மையப்படுத்திய கதை இது. நீண்ட நாளாக இருக்கும் ஒரு பிரச்சினையை தீர்ப்பதற்காக போராட்டத்தில் குதிக்கிறார்கள். அந்தப்பகுதி மக்களின் பேராதரவோடு அந்த போராட்டத்தில் பெரிய வெற்றி பெறுகிறார்கள். இதுதான் கன்னித்தீவின் கதை.


Advertisement