சினிமா

என்னவொரு டெடிகேஷன்! பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் செய்த காரியம்! நெகிழ்ந்துபோன அவரது தங்கை!

Summary:

என்னவொரு டெடிகேஷன்! பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் செய்த காரியம்! நெகிழ்ந்துபோன அவரது தங்கை!

விஜய் தொலைக்காட்சியில்  மிகவும் விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் சென்று ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவரும் தொடர் பாண்டியன் ஸ்டோர். இந்த தொடர் தற்போது உணர்வுபூர்வமாக, ரசிகர்களை கண்ணீர் சிந்தவைக்கும் வகையில் ஒளிபரப்பாகி வருகிறது.

அதாவது பாண்டியன் ஸ்டோர் தொடரில் அம்மாவாக நடித்தவர் உயிரிழந்தது போலவும், அவருக்கு இறுதி சடங்குகள் நடப்பது போன்ற காட்சிகள் ஒளிபரப்பாகி வந்தது. இந்நிலையில் காதல் திருமணம் செய்து கொண்டு, வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட கண்ணனால் அம்மாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியவில்லை.  மேலும் அவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்காக நிஜத்திலேயே மொட்டை அடித்துள்ளார்.

மேலும் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தும் வகையில் மிகவும் உருக்கமாகவும் நடித்து வருகிறார். இந்த நிலையில் கண்ணனாக நடித்து வரும் சரவணவிக்ரமின் தங்கை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், உனது நடிப்பு, குரல், டெடிகேஷன் ஆகியவற்றை பலரும் பாராட்டி வருகின்றனர். உனது தங்கையாக இருப்பதில் மிகவும் பெருமையடைகிறேன். இதையெல்லாம் பார்க்கும்போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நான் இப்போது எவ்வளவு உயரத்தில் இருக்கிறேன் என்பதை என்னால் சொல்லவே முடியாது என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.


Advertisement