இந்தியா சினிமா

கங்கனா ரனாவத்தை பாலியல் ரீதியாக சீண்டிய பிரபல இயக்குனர். அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

Summary:

kankana ranavath - queen movie - 2014

சினிமா துறையில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில் நடிகை கங்கனா ரணாவத் குயின் பட இயக்குனர் விகாஷ் பகால் மீது பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ரனாவத். தமிழ் சினிமாவில் 2008ஆம் ஆண்டு தாம் தூம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். பல விருதுகளை பெற்றுள்ள அவர் 2014 ஆம் ஆண்டு வெளியான குயின் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் வெற்றிப் படமாக அமைந்தது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

Image result for queen movie 2014 director vikash

இந்த நிலையில் குயின் படத்தின் இயக்குனர் விகாஷ் பகால் மீது ஏற்கெனவே பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி இருந்தார். இந்நிலையில் அதுகுறித்து, கங்கனா ரனாவத் பேசும்போது, இந்தக் குற்றச்சாட்டு உண்மையாக தான் இருக்கும். ஏனெனில் என்னிடமும் பல தடவை பாலியல் தொல்லை கொடுக்கும் விதமாக பழகினார். அவரிடம் இருந்து மீண்டு வருவதற்கு பெரும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டி வந்தது என்று தனக்கு நேர்ந்த கொடுமைகளை தற்போது வெளியிட்டுள்ளது மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 


Advertisement