சினிமா

ட்ரைலரே இப்படி இருக்கே...மரண மாஸாக வெளியான காஞ்சனா 3 ட்ரைலர்.! மிரண்டு போன ரசிகர்கள்!!

Summary:

kanjana 3 trailar released

தமிழ் சினிமாவில் நடன இயக்குனராகவும், சிறந்த இயக்குனராகவும் இருந்து ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர் நடிகர் ராகவா லாரன்ஸ்.

இவரது இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் 'முனி'. இதன் இரண்டாம் பாகம் 'காஞ்சனா' என்ற பெயரில் வெளிவந்தது. அதனை தொடர்ந்து காஞ்சனா-2  வெளியானது. இவை அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

kanchana 3 க்கான பட முடிவு

இந்நிலையில் தற்போது காஞ்சனா படத்தின் 3-ம் பாகம் உருவாகியுள்ளது. ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தை ராகவேந்திரா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் லாரன்ஸே தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஓவியா மற்றும் வேதிகா நடித்துள்ளனர். மேலும் கோவை சரளா, தேவதர்ஷினி, ஸ்ரீமன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. .

இந்நிலையில் தற்போது அலறவைக்கும் காஞ்சனா  படத்தின் ட்ரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.


Advertisement