சினிமா

நாம் செய்த பெரும் அதிர்ஷ்டம்! இந்திய பிரதமருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி நடிகை கங்கனா வெளியிட்ட வீடியோ!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 70 ஆவது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வருகிறார். அதனை முன்னிட்டு  பாஜக கட்சியினர் பலரும் அன்னதானம் வழங்குதல், சுகாதாரப்பணிகளை மேற்கொள்வது, மரம் நடுவது என நாடு முழுவதும் ஏராளமான நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். மேலும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 இந்திய பிரதமர் மோடிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, சசிதரூர் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் பிறந்தநாள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

இந்நிலையில் சமீப காலமாக பாலிவுட் உலகில் வாரிசு அரசியல், போதைப்பொருள் புழக்கம் இருப்பதாக கூறி பல்வேறு சர்ச்சைகளை கிளப்பிவந்த  நடிகை கங்கனா ரனாவத் இன்று பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர்,  பிரதமர் மோடி மீது தான் மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகவும், மோடி போன்ற ஒரு பிரதமரை பெறுவது நமது நாட்டு மக்கள் செய்த பெரும் அதிர்ஷ்டம் எனவும் அவர் கூறியுள்ளார்.


Advertisement